இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் காவலில் உள்ள சிறுவர்களின் சராசரி எண்ணிக்கை 73 சதவீதம் குறைந்தாலும், அடுத்த மாதங்களில் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஆய்வைத் தொகுத்துள்ள தேசிய தணிக்கை அலுவலகம், இது கொவிட் தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்டதில் இருந்து விசாரிக்கப்படும் நீதிமன்ற வழக்குகளின் அதிகரிப்பு மற்றும் ஓரளவுக்கு பொலிஸ்துறை, குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்ற சட்டமூலம் மற்றும் அரசாங்கத்தின் தாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கூறுகிறது.
இதற்காக, கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. புதிய பாதுகாப்பான பாடசாலை திறப்பது மூன்று ஆண்டுகள் தாமதமாகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் குற்றவாளிகள் நிறுவனங்களில் 15 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு ஜூலையில் 343ஆக இருந்து 2025ஆம் ஆண்டு ஜூலையில் 700ஆக இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைப் போலவே இருக்கும் (மார்ச் 2019-20 இல் 737 சிறுவர்கள் காவலில் இருந்தனர்), ஆனால் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைவு. 2010-11 இல், மார்ச் மாதத்தில் 2,027 சிறுவர்கள் காவலில் இருந்தனர்.