அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை குறித்த பிரேரணையில் சுமார் 125 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயேற்சையாக இயங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.