உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய ஸ்கொட் சிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.
அத்துடன் உக்ரைனிய மோதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானிய நாட்டவர் இவராவார். எனினும், இருவரின் அடையாளத்தையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை.
சிப்லியின் மரணம் மற்றும் இரண்டாவது நபர் எப்படி அல்லது எப்போது காணாமல் போனார் என்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை.
இராஜதந்திர வட்டாரங்கள் பெரும்பாலும் இரு நபர்களும் மரியுபோல் அல்லது டான்பாஸில் உக்ரைனிய ஆயுதப்படைகளுடன் பணியாற்றும் வெளிநாட்டு தன்னார்வலர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பேஸ்புக் மற்றும் அவரது நினைவாக அமைக்கப்பட்ட நிதி திரட்டும் பக்கங்கள் உட்பட பிரித்தானிய ஆயுதப்படையின் முன்னாள் உறுப்பினராக விளங்கும் சிப்லிக்கு இணையத்தில் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.