பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்த நிலையில், குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதென பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதநாத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று சமீப நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.
அடுத்ததாக பாராளுமன்றம் கூடும் போது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் பதவி விலகுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது பொய். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள், முதலில் செய்தியை சரிபார்க்கவும்” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்தோடு, நாளையதினம் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.