ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர்.
பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த சவப்பெட்டி கிட்டத்தட்ட விழுந்தது.
ஆனால், இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய பின்னரே, தாம் அவர்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் சவப்பெட்டியைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதிகாரிகள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கு முன்பு, அங்கு சிறிய பதற்றம் ஏற்பட்டிருந்தது.
வியாழக்கிழமை, பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் வளாகத்தில் ஒரு இறுதிச் சடங்கின் அரிதான நிகழ்வு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு அவரது சவப்பெட்டி பாலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது. ஜனாதிபதி அப்பாஸ் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், பாலஸ்தீனிய நோக்கத்தை பாதுகாக்க ‘தன் உயிரை தியாகம் செய்த’ ‘சுதந்திர வார்த்தையின் தியாகி’ என்று வர்ணித்தார்.
அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும், போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ‘அப்பாஸ் எந்த அடிப்படையும் இல்லாமல் இஸ்ரேல் மீது பழி சுமத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அபு அக்லா புதன்கிழமை அதிகாலையில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தார். அப்போது, அபு அக்லா புதன்கிழமை சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது, மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அல் ஜசீரா தயாரிப்பாளர் அலி சமூதி வன்முறையின் போது சுடப்பட்டு காயமடைந்தார்.
51 வயதான பாலஸ்தீனிய அமெரிக்கரான ஷிரீன் அபு அக்லா, அல் ஜசீராவின் அரபு செய்தி சேவையின் மூத்த ஊடகவியலாளராக இருந்தார் மற்றும் இரண்டு தசாப்தங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.