• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/16
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
75 1
A A
0
46
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் நேற்று கூடியிருந்தது.

இதன்போதே சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குபவர்களுக்கு நான்கு மாதங்களுக்கான 34 பில்லியன் ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

14 அத்தியாவசிய மருந்துகளில் 2 மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் இல்லை எனவும் அதில் ஒன்று இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து எனவும் அதற்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெளிநோயாளர்களுக்கான மருந்து தற்போது காலாவதியாகிவிட்டதாகவும், அதற்கு மாற்று மருந்து இல்லை என்றும், ஆனால் தனியார் துறையிடம் அவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் 49 மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், சத்திரசிகிச்சைக்கு தேவையான 7 ஆயிரத்து 854 சத்திரசிகிச்சை கருவிகளில், 2 ஆயிரத்து 48 கருவிகள் முறையான பாவனையில் இருக்க வேண்டும் எனவும் ஆனால் அவற்றில் ஆயிரத்து 155 மருந்துகள் தற்போது கிடைக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்வெட்டு நேரத்தில் டீசல் பிரச்சனை காரணமாக மின்பிறப்பாக்கிகளை இயக்க முடியாமல் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், டொலர் பிரச்சனை காரணமாக மருந்து இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 80 வீதமான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related

Tags: இருதய நோயாளர்சஞ்சீவ முனசிங்கசத்திரசிகிச்சைமருந்துகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Next Post

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – சஜித் அணியினர் தீர்மானம்

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு - சஜித் அணியினர் தீர்மானம்

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது - விஜித ஹேரத்

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்-  ராஜித

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த? - ராஜித வெளியிட்ட முக்கிய தகவல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.