புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி,
- நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
- சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர்
- விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
- ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
- கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்
- ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர்
- மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
- நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
- டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பரமானம் செய்துகொண்டிருந்தனர்.
அதன்படி,
- தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சர்,
- பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்
- பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி அமைச்சர்
- காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்