அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதில் குறிப்பாக அரச மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.