தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது.
ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது.
இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மிக்கும் நிலையை அடைந்தது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதாவது 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனக் கடன்களாக உள்ளன.
இந்நிலையில் இலங்கை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை ஒத்திவைக்க வேண்டும் என்ற சீனாவிடத்தில் முன்வைத்த கோரிக்கையை அந்நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வருடம் இலங்கை சீனாவிற்கு மட்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன்களுக்காக திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, நாட்டின் உள்கட்டமைப்பு அபிவிருத்தியானது கடன் வாங்குவதை அடிப்படையாகக் கொண்டதாலும், அதன் அந்நியச் செலாவணி வருமானம் வீழ்ந்தமையாலும் ஏற்பட்டதாகும்.
கொழும்பு, அதன் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முயற்சிகளில், விரைவான திருத்தங்களை நாடிய போதும் சீனா தனது உற்பத்தித் தளத்தை வலுப்படுத்தியதோடு ஏற்றுமதியை மேம்படுத்தியது.
மேலும், வர்த்தக விதிமுறைகளுக்கு அருகில் சீனக் கடன்களுக்குப் பதிலாக மென்மையான நிபந்தனைகளில் பலதரப்பு முகவர்களிடம் உதவி கேட்பதே இலங்கைக்கான சிறந்த உத்தியாக இருந்திருக்கும்.
உலகவங்கி சமீபத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
சீனா நலிவடைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 3-4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் பெறவதே இலங்கைக்குள்ள ஒரேவழியாகும்.