அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள எலும்பியல் வசதிக்குள் நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் எனவும் எவருக்கும் எந்த காயமும் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனவும் துல்சா பொலிஸ்துறையின் ரிச்சர்ட் மியூலன்பெர்க் தெரிவித்தார்.
துல்சா மருத்துவ கட்டடத்தை அணுகுவதற்காக அதிகாரிகள் படிக்கட்டுக் கதவை உதைத்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கிதாரி சுட்டபோது, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் இந்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கி ஏந்திய நபர், 35 முதல் 40 வயதுடையவர் என்றும், துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்தியவர் என்றும், துல்சா துணைத் தலைவர் எரிக் டால்க்லீஷ் கூறினார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள், அடையாளங்கள் வெளியிடப்படவில்லை, நோயாளிகள் மற்றும் ஊழியர்களும் இதன்போது காயப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
துப்பாக்கிதாரி மற்றும் அவரது நோக்கம் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.