ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்து குறித்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் ரஷ்யாவின் போரின் விளைவு எரிசக்தி விநியோகத்தை பாதித்துள்ள நிலையில் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் நாம் முன்னோக்கி நகர வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.
ஜேர்மனி, ஒஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை குறைப்பது மொஸ்கோவின் தங்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் என ஜேர்மன் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார்.