கோட்டே மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எதுல் கோட்டை, கோட்டே, பெத்தகன, மிரிஹான, மாதிவெல, தலபத்பிடிய, உடஹம்முல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, மற்றும் விஜேராம சந்தி முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.