நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், நாளை முற்பகல் 9.30 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு அமுலாக்கப்படும் நேரம் குறித்த அட்டவணை