நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, எரிவாயு கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை அந்த நிறுவனம் கோரியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7,00 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.