அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.