ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர 2 இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.