அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது.
ஆசிய திறைசேரிக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் கெல்லி கெய்டர்லின் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
இந்த நிலையில, பிரதமரைச் சந்தித்த அவர்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விஜயத்தின் போது, அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கையர்களுக்கு உதவுவதற்கான மிகச் சிறந்த வழிகளை பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.
மேலும் இந்த பிரதிநிதிகள் குழு இம்மாதம் 29ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.