தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதாரத்துறை பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தற்போது 15 நோயாளர் காவு வண்டிகளுக்கும் போதிய எரிபொருள் இல்லை என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றவோ, அவசர காலத்தில் 15 நோயாளர் காவு வண்டி சேவையை வழங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயாளர் காவு வண்டி சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் கிடைப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயாளர் காவு வண்டிகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது, வரிசையில் நிற்பவர்கள் எரிபொருள் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய நோயாளர் காவு வண்டி எதுவும் வைத்தியசாலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.