இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் பேக்கரி தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 50 வீதமான பேக்கரிகள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி உற்பத்திக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் பேக்கரிகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான எந்த திட்டத்தையும் யாரும் தயாரிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பேக்கரி உரிமையாளர் முற்றிலும் ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.