இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
பிரதமர் ராணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்
இந்நிலையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் இராஜினாமா செய்யச் சொல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.