இரசிகர்கள் எதிர்பார்த்த லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், மூன்றாவது அத்தியாயம் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரின் தொடக்க போட்டியில், நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியும், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தொடக்க நாளின் இரண்டாவது லீக் போட்டியில், கொழும்பு அணியும் கண்டி அணியும் மோதவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 24 போட்டிகள் விளையாடப்படுகின்றன. இதில் 20 முதல் கட்டப் போட்டிகள் நான்கு இறுதிக்கட்ட போட்டிகள் அடங்கும்.
முதல் 14 லீக் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது.
அடுத்த 10 போட்டிகள் (13ஆம் திகதி முதல்) மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டி, எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற இரண்டு லங்கா பிரீமியர் லீக் தொடர்களிலுமே ஜப்னா கிங்ஸ் அணியே சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.