விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்கு சொந்தமான வீட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருப்பதாக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒலிப்பதிவில் எவ்வித உண்மையும் இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விளக்கமளித்து விமானப்படை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது விமானப்படை மற்றும் விமானப்படைத் தளபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் மத்தியில் வெறுப்பையும் கோபத்தையும் பரப்பும் குறுகிய சந்தர்ப்பவாத நோக்கத்தை அடைவதற்காகவும் வெளியிடப்பட்ட செய்தி என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.