நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக பகுதியை இராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்குள்ள போராட்டக்காரர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.