ஹக்கானி வலையமைப்பின் தளபதி – பாகிஸ்தானின் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படும் தலிபான் பிரிவான தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் சேர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய ஊடக ஆய்வு கல்லூரியின் டுவிட்டர் பதிவொன்றில் ‘ஹக்கானி வலையமைப்பின் தளபதி திப்பு குல் மார்வாட் தெஹ்ரிக்-இ-தலிபானில் இணைந்தார்.
தலிபான் பிரிவுகளில், ஹக்கானி வலையமைப்பு பாகிஸ்தானின் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹக்கானி வலையமைப்பு பாகிஸ்தானிய உளவுத்துறை சேவைகளுடன் நெருக்கமாக உள்ளது. அவர்களின் ஒருங்கிணைப்பு குற்றம் மற்றும் தீவிர பயங்கரவாதமாக மாறுகிறது.
ஐஎஸ்ஐ, ஹக்கானி வலையமைப்பை ஒரு முக்கிய கூட்டாளியாகக் கருதுகிறது, அத்துடன் பல ஜிஹாதிக் குழுக்களுடனான கூட்டணிகளைக் கருத்தில் கொண்டு, மற்ற அரசு சாரா நிறுவனங்களுடன் ஈடுபாட்டிற்கு அவர்களைப் பயன்படுத்தும்போது முதலீடு செய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாக்கிஸ்தானில் அரசியல் நீரோட்டத்தில் நுழைவதற்கான தற்போதைய முயற்சி தடையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் சட்டவிரோத குழு அந்நாட்டின் குடிமக்களுக்கு அரசியல் ரீதியான தீங்கு விளைவிக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். ‘அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக தெஹ்ரிக்-இ-தலிபான் சமீபத்தில் பிரதிபலித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய, வட்டியில்லா வங்கி முறையை செயல்படுத்த ஃபெடரல் ஷரியத் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு வழங்கிய உத்தரவை பாராட்டியது.
இஸ்லாமாபாத் இடைக்கால அரசாங்கம், தலிபான் அரசாங்கத்தின் அனுசரணையில் குறித்த குழுவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டது. இதனால் தெஹ்ரிக்-இ-தலிபான் தனது அடிவருடிகளை தயார்படுத்துகிறது என்று ஒரு நிபுணர் கூறினார்.
தெஹ்ரிக்-இ-தலிபானின் பயங்கரவாத ஆட்சியின் போது நிகழ்த்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், போர்க்குணமிக்க அமைப்பை நம்புவது மிகவும் கடினம், ஏனெனில் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம், அவற்றின் சாத்தியமான வீழ்ச்சி பற்றிய பல கேள்விகள் கவனிக்கப்படாமல் உள்ளன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 2007 இல் தெஹ்ரிக்-இ-தலிபான் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து பழங்குடி மாவட்டங்களில் அமைதிக்காகப் பல சுற்றுப் பேச்சுக்களின் போது அளித்த வாக்குறுதிகளில் இருந்து போராளி அமைப்பு பின்வாங்கியதே இந்த நம்பிக்கைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகின்றது.
ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் எதிர்பாராத வெளியேற்றம் இந்தக்குழுவிற்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்தது, அந்தக்குழு தன்னை மறுசீரமைத்தது. இஸ்லாமாபாத் இடைக்கால அரசுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டது.
உள்ளுர் ஊடக ஆதாரங்களின்படி, தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபானில் இருந்து எழுப்பப்பட்ட முதன்மையான கோரிக்கையானது, அரசியல் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில், முன்னாள் கூட்டாட்சி நிர்வாகத்தின் பழங்குடிப் பகுதிகளை கைபர் பக்துன்க்வாவுடன் இணைப்பதைத் திரும்பப் பெறுவதாகும். அத்துடன் சில அரசியல் சக்திகள், சீர்திருத்தங்களுக்கு எதிரான கண்ணோட்டம்’ கொண்டவர்கள் இலக்காக மாறலாம் என்றும் கூறப்படுகின்றது.