ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் படையின் தலைவர் பதவியினை மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்சியுடனான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.