தென்னாப்பிரிக்கா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் விஜயம் செய்யவுள்ளார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஆபிரிக்காவிற்கு தனிப்பட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் அமெரிக்காவும் இராஜதந்திர நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் தென்னாபிரிக்கா, மேற்கத்திய நாடுகளுடன் இணையாமல் உக்ரைன் – ரஷ்யா போரில் நடுநிலை வகிக்கின்றது.
இந்நிலையில் அங்கு சென்றிருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், மேற்கத்திய நாடுகளின் தடைகளின் விளைவாக உலகளாவிய ரீதியில் உணவு விலைகள் அதிகரித்ததாக கூறியிருந்தார்.
இதனை மறுத்துள்ள அமெரிக்கா, உக்ரேனிய துறைமுகங்களை மொஸ்கோ முற்றுகையிட்ட காரணத்தினால் இந்தநிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் அடுத்த மாதம் கானா மற்றும் உகாண்டாவுக்குச் செல்லவுள்ளார்.
இதற்கு முன்னதாக கென்யா மற்றும் சோமாலியாவிற்கு விஜயம் செய்த சமந்தா பவர், உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு குறித்து கவலை வெளியிட்டார்.