போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போரால் அடையமுடியாத இலக்கை, வேறு வழியில் அடைய முடியும் என அந்த குழுக்கள் கருதுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுங்கள், ஆனால் உங்களுடன் இருப்பவர்கள் யாரென்பதையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதையும் அடையாளம் கண்டு கொள்ள விழிப்பாகவே இருக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு கிடைத்த தகவலொன்றால் தான் அச்சம் அடைந்துள்ளதாகவும், கனடாவில் உள்ள நபரொருவரே தனக்கு இந்த தகவலை வழங்கியுள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பதிவொன்றை இட்ட கையோடு, சர்வதேச அமைப்பொன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.
பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நிதி உதவி வழங்க தயார் என அவரிடம் கூறப்பட்டுள்ளது எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி பல சூழ்ச்சிகளுக்கு மத்தியிலேயே அரசை முன்னெடுக்கின்றோம். நாட்டு பணத்தை எவரும் கொள்ளையடிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்திய செலாவணி இருப்பை கொள்ளை அடிக்கவும் முடியாது. எனவே, போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.