எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது.
நேற்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.
எனினும் எரிபொருளினை பெற்றுக்கொள்ளும் சில தனியார் பேருந்துகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சில தனியார் பேருந்துகளுக்கு அதிக விலைக்கு குறித்த எரிபொருளினை விற்பனை செய்வதாகவும் இலங்கை போக்குவரத்து சபை அண்மையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.
இந்தநிலையிலேயே எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் நேற்று முதல் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.