வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதுடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை நிறுவுவதும் நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே புதிய சுற்றாடல் விஞ்ஞான பீடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இருந்த வவுனியா பல்கலைக்கழகம் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

















