இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 139 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.