ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் வரலாற்றில் இருந்ததையே ஜனாதிபதி இந்த உரையில் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் ஜனாதிபதி முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.