மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 59 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன் காரணமாக 59 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற இந்தியா அணி, 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை ஒருபோட்டி மீதமிருக்க 3-1 என கைப்பற்றியுள்ளது.