தென் கொரியாவின் தலைநகர் சியோலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (திங்கள்கிழமை) இரவு பெய்த கனமழையால் வீதிகள் நீரில் மூழ்கியது, மெட்ரோ நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியது மற்றும் நகரம் மற்றும் அண்டை மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டது.
சில பகுதிகளில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக கொரியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ படிக்கட்டுகளின் படிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஜன்னல்கள் வரை நீரில் மூழ்குவதையும், மக்கள் முழங்கால் உயரமான தண்ணீரில் வீதிகள் செல்வதையும் சமூகவலைதள படங்கள் காட்டுகின்றன.
சியோலின் சில பகுதிகள், மேற்கு துறைமுக நகரமான இஞ்சியோன் மற்றும் ஜியோங்கி மாகாணம் சியோலைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மணிக்கு 10 சென்டிமீட்டர் மழை பெய்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.