இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணம் நவம்பவர் 20ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகின்றது.
32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன
ஏ பிரிவில் கட்டார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து. பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ். சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, போலந்து. டி பிரிவில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, அவுஸ்ரேலியா. இ பிரிவில் முன்னாள் சம்பியன்கள் ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா. எஃப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா. ஜி பிரிவில் பிரேஸில், செர்பியா, சுவிஸ்லாந்து,
கேமரூன். எச் பிரிவில் போர்துகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
தொடரின் ஆரம்ப போட்டியில், தொடரை நடத்தும் கட்டார் அணியும் ஈகுவடார் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடர், டிசம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.