தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை ஸ்கொட்லாந்து நாட்டவரான கெய்லி பிரேசர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
காலி முகத்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அடிப்படையில் குடிவரவுத் திணைக்களம் தனது விசாவை தன்னிச்சையாக இரத்து செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முடிவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், தனது விசாவை இரத்து செய்யும் முடிவை மாற்றி உத்தரவு பிறப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.