இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராகியுள்ள நிலையில், தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கிறது
தேம்ஸ் நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமாக கீழ்நோக்கி சென்றடைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்களின் அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1935ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.