நெஷனல் பேங்க் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், பாப்லோ கரேனோ புஸ்டா சம்பியன் பட்டம் வென்றுள்ளதோடு, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சிமோனா ஹெலப் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டா, போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ்சை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டா,3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
இதேபோல, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சிமோனா ஹெலப், 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.