ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்குள் இணையாத காரணத்தினாலேயே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் சிலருக்கு தற்போதைய அமைச்சரவையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களைத் தவிர எஸ்.எம்.சந்ரசேன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
எனினும், குறித்த பட்டியலுக்குள் மாத்தறை மாவட்ட தலைவர் டலஸ் அழகப்பெருமவின் பெயர் உள்வாங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவர் சமல் ராஜபக்ஷ அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.