இம்மாதம் விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கூடினால் இங்கு எரிபொருள் விலை கூடும் , விலை குறைந்தால் இங்கு குறைக்கப்படும் அதுவே எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படை என விளக்கமளித்திருந்த அமைச்சர் தற்போது இது தொடர்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.