பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சில பிரமுகர்களை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து ஒய்வு பெற்று, அரசியலில் ஈடுபடாத மரியாதைக்குரிய நபருக்கு ஆளுநர் பதவி வழங்குவதுதான் இதுவரை பொது மரபாக காணப்படுகின்றது.
எனினும், இம்முறை பாரம்பரியத்தை மீறி அரசியலில் தீவிரம் காட்டிவரும் சில பிரமுகர்களுக்கு ஆளுநர் பதவி வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.