பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.