அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே.பெர்ணான்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.