பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் இணையத்தில் இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.