நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற விசேட குழு முன்மொழிந்துள்ள தேர்தல் முறை திருத்தங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.