அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
22ஆவது அரசியலமைப்பு திருத்தமானது, அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அதன் சரத்துகளை ஏற்க வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த வாரம், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.