சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இலங்கைக்கு வருகைத் தரும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், நாளைய தினம் முதல் இலங்கை உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்பார்க்கும் கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 03 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.