ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு சென்ற அவர்களின் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் இரண்டு அல்லது மூன்று பேர் அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.