30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இன்று(புதன்கிழமை) தரையிறக்கப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது மசகு எண்ணெய்யினை ஏற்றிய கொள்கலன் கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதிகளில் ஒட்டோ டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டினை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
92 ஒக்டேன் பெற்றோல் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதிக்குள் நாட்டினை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று முன்தினம் முதல் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.