முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.