அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக , ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை அடுத்து அவருடன் வந்தவர்கள் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் எதிரியாக ஓ.பன்னீர்செல்வமும், 2-வது எதிரியாக வைத்திலிங்கமும், 3-வது எதிரியாக மனோஜ் பாண்டியன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல், கலகம் செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், நம்பிக்கை மோசடி, சொத்துக்களை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.